தனியார் மருத்துவமணைகளில் கட்டணக் கொள்ளை யா?

மதுரையில் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணக் கொள்ளையா?

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

மதுரை

மதுரையில் பல தனியார் மருத்துவமணைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசு விதித்த கட்டணத்தை காட்டிலும், கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கொரோனா சிகிச்சைக்கு ஐந்து நாளைக்கு மருத்துவமணை நிர்வாகமானது ரூ. 1 லட்சத்து 50 வரை வசூலித்து கொள்ளலாம் என்றும், ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் 12 நாளைக்கு ரூ. 6 லட்சம் வரை கட்டணமாக வசூலித்து வருகிறதாம்.
இது குறித்து சமூக வளைதலங்களிலும், மருத்துவமனைகளில் அதிகம் வசூலிப்பதாக புகார்கள் வந்துகொண்டே உள்ளன.
மேலும், இது குறித்து புகார்கள் தெரிவித்தும், தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகமானது கட்டண வசூலிப்பதை ஒழுங்குபடுத்த வில்லையென, திருவேடகத்தை சார்ந்த ஜெனகராஜ் கவலை தெரிவித்தார்.
இது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலையீட்டு, தனியார் மருத்துவமணைகளின் கொரோனா சிகிச்சை கட்டணம் அதிகம் வசூலிப்பதை முறைப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
இந்த கட்டணக் கொள்ளை பற்றி தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: