மதுரையில் விடிய, விடிய மழை

மதுரையில் இரண்டு நாட்களாக விடிய, விடிய சாரல் மழை

மதுரை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய, விடிய சாரல் மழை பெய்து வருகிறது.
மதுரை அண்ணாநகர், கோரிப்பாளையம், புதூர், கடச்சனேந்தல், அழகர்கோவில், திருப்பாலை, அய்யர் பங்களா, ஒத்தக்கடை, கருப்பாயூரணி, மேலமடை, கோமதிபுரம், சோழவந்தான், வாடிப்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் விடிய, விடிய சாரல் மழை பெய்து வருகிறது.
இருந்தபோதிலும், வீடுகளின் உள்ளே, இரவில் வெப்பம் நிலவியது.
மதுரை நகரில் சாலைகளில் பல இடங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம் போல தேங்கி நின்றன.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: