வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் க லந்துரையாடல்

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடல்:

மதுரை

தமிழக முதல்வர் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை வந்த போது, தொழில் வணிகத்துறை சார்பில் நடந்த கலந்துரையாடல் நடந்தது. இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர்
ஜெகதீசன் தலைமையில் தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது.,

கரோனா நோய் தொற்று தமிழகத்தில் பரவல் அதிகம் உள்ள நிலையில் தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது
எளிய முதல்வர். முதல்வரை அனுகுவது எளிது. 45 நிமிடங்கள் எங்களுடன் கலந்துரையாடினார். வணிகத்தில் ஈடுபடுவோர் வணிகம் தொடர்பாக அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்வதற்கு
இ. பாஸ்
நடை முறையை எளிதாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் ..
உடனடியாக, வணிகம் மற்றும் தொழிலில் உள்ளவர்கள் தங்கள் நிறுவன கடிதததில் இ. பாஸ்
கேட்டு வேண்டுகோள் விடுத்தால், உடனடியாக ஒரு மாதத்திற்கு தேவையான
இ. பாஸ்
மாவட்ட ஆ ட்சியர் வழங்குவார் என முதல்வர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். வரும் ஞாயிற்றுக்கிழமை களில் விசேச நிகழ்வுகள் உள்ளது என தெரிவித்தோம் ..
அதற்கு சாத்தியமில்லை என முதல்வர் தெரிவித்தார். மருத்துவ வல்லுநர்களிடமும் ஆலோசனை பெற்று உரிய முடிவு எடுக்கம்படும் என முதல்வர் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க வேண்டும்.
மதுரைக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்தார். நிலுவையில் உள்ள திட்ட பணிகளை துவக்கி வைக்க வேண்டும். தென் மாவட்டங்களில் கட்டுமான பணிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் :

மதுரை மாவட்டத்தில் 18 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டள்ளது. கூட்டு குடிநீர் திட்டம், சாலை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. விமான நிலையம் விரிவாக்க பணி படிபடியாக நடந்து வருகிறது
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் உள்ள சமையல் கூடத்தில் இருந்து தான், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா டிரஸ்ட் மூலம் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. தற்போது இந்த. சமைய ல் கூடத்திற்கு . அம்மா கிச்சன் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும் பாராட்டி உள்ளார்.
நீலகிரி உள்ளிட்ட பகுதியில் நிலச்சரிவு பகுதியை மீட்க. அமைச்சர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி கடந்த. சில நாட்களுக் கு முன் மதுரை வந்து சென்ற பிறகு . தென் மாவட்டங்களில் தொழில் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.. இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: