முதல்வர் வருகை மதுரைக்கு நன்மை

முதலமைச்சர் வருகை மதுரைக்கு பயன் விளைவிக்கும்: வருவாய்த்துறை அமைச்சர்

மதுரை

வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார்
செய்தியாளர்களை சந்தித்து
தமிழ்நாடு முதலமைச்சர்
வருகையின் சிறப்புக் குறித்து தெரிவித்தார்.:

உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிவக்கைகள்
நிவாரண நடவடிக்கைகள்
மீட்பு நடவடிக்கைகளுக்காக
முதலமைச்சர்
மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனும்
மாநகராட்சி ஆணையாளர்களுடனும்
காவல்துறை உயர் அதிகாரிகளுடனும் சென்னையிலிருந்து கானொலிக் காட்சி மூலமாக ஏறத்தாழ 6 முறைக்கு மேல் ஆய்வு மேற்கொண்டு உரிய அறிவுரைகள் வழங்கி அனைத்து நடவடிக்கைகளையும் முழு மூச்சாக மேற்கொள்வதற்கு கள நிலவரங்களை ஆய்ந்து அறிந்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள்.
ஏற்கனவே எடுத்துவரும் ஆய்வு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.
அதிலே ,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகள்
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகள்
திருநெல்வேலி,
தென்காசி மாவட்டஙகளில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகள் என 4 மாவட்டங்களிலும் உள்ள 27 சட்டமன்ற தொகுதிகளிலும் கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிவக்கைகள்
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள்
குறிப்பாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்த்துவதற்கு தேவையான அறிவுரைகள் வழங்கி விவசாயப்பணிகள் தடையின்றி மேற்கொள்வதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகள்
தொழில்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்கள்.
விவசாயத்தையும்
தொழில்துறையையும் இருகண்களாக கொண்டு
முதலமைச்சர்
மாவட்ட நிர்வாகத்தில் எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
மதுரை மாவட்டத்திற்கு வருகைதந்த
முதலமைச்சர் அவர்கள் ஏறத்தாழ ரூ.300 கோடிக்கு மேல் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
ரூ.200 கோடிக்கு மேல் முடிவுற்றப் பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக தனது பொற்கரங்களால் திறந்து வைத்தார்கள்.
ஏழை,
எளியவர்களுக்கான வீட்டுமனை பட்டா,
முதியோர் ஓய்வூதியம்
முதலமைச்சர் நிவாரண நிதி
அம்மா இருசக்கர வாகனம்
விலையில்லா முகக்கவசம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கினார்கள்.
அதன்பின் தொழில்துறை மேம்படுத்த தொழில் அதிபர்களையும்,
விவசாயிகளையும்
மகளிர் சுயஉதவிக்குழுவினர்களையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார்கள்.
இது மதுரைக்கு கிடைத்த வரபிரசாதமாகும். மாவட்ட நிர்வாகம் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்தது.
முதலமைச்சர்
நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும்
சாலைகள் அமைப்பது,
பாலங்கள் அமைப்பது,
குடிநீர்த் திட்டங்கள்
வளர்ச்சித் திட்டங்கள்,
நில எடுப்புப் பணிகள்,
விமான நிலைய விரிவாக்கப்பணிகள் ஆகியப்பணிகளை விரைவாக முடிப்பதற்கு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள். மதுரைக்கு கிடைத்த பொக்கிஷமாக மதுரையில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்கின்ற அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக மானியத்தில் இடம் வழங்கி மானியத்தில் தொழில் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
நீலகிரி போன்ற நிலச்சரிவு ஏற்படுகின்ற மலைப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். அதனை ..பேரிடர் மேலாண்மை துறை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.
எஸ்.விசாகன்,
மேலூர் சட்டமன்ற உறுப்பினர்
.பி.பெரியபுள்ளான்(எ)செல்வம்,
கூடுதல் ஆட்சியர்(மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை)
.ப்ரியங்கா பங்கஜம்
உட்பட பலர்
கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: