போலீஸாரை கண்டித்து பெற்றோர்கள் தீக்குளி க்க முடிவு?

மதுரை விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மைனர் பெண் கடத்தல் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர் தீக்குளிக்க முடிவு :

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் பாண்டியம்மாள் ஆகியோர் மகள் சௌந்தர்யா 17 கடந்த எட்டாம் தேதி முதல் காணவில்லை இது குறித்து சந்திரன் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட கண்காணிப்பாளர்,சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ,சௌந்தர்யா பாட்டி பொம்மு 60 விஷம் குடித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், பெற்றோர் சந்திரன் பாண்டியம்மாள் ஆகியோர் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க போவதாக கூறினார்கள்.
இதுகுறித்து ,
சந்திரன் கூறியதாவது விக்கிரமங்கலம் ஊராட்சி நரியம்பட்டி கிராமத்தில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் எங்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் இருந்தார்கள் எனது மூத்த மகள் கடந்த வருடம் நோய்வாய்ப்பட்டு இறந்தது இரண்டாவது மகள் சவுந்தர்யா விக்கிரமங்கலம் கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தது கடந்த மாதம் ஒன்னாம் தேதி எங்களது மகள் சௌந்தர்யாவை பக்கத்து ஊரைச் சேர்ந்த பால் கற்கக்கூடிய விவேக் 25என்ற பையன் கூட்டி சென்று விட்டான் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம் இதன் பேரில் போலீசார் விசாரணை செய்து எனது மகளை எங்களிடம் அனுப்பி வைத்தனர் பின்னர் கூட்டிச் சென்ற வர்களை போலீசார் கண்டித்து அனுப்பி வைத்தனர் சவுந்தர்யாவை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி விட்டு வந்தேன் அங்கிருந்த சௌந்தர்யாவை எட்டாம் தேதி உறவினர் பையன் ஒருவர் கூட்டிச் சென்று புத்தராக தெரிந்தது இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டையில் புகார் கொடுத்தோம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை ஆகையால் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் பதிவு தபால் மூலம் அனுப்பி உள்ளோம் போலீசார் இதுகுறித்து எனது மகளை கண்டுபிடித்து கொடுக்கவில்லை இதனால் எனது குடும்பமே மிக மன வேதனையில் உள்ளோம் இந் நிலையில் எனது அம்மா விஷம் குடித்து சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் முதல் சிகிச்சை பெற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார் சௌந்தர்யா உயிரோடு இருக்கிறாரா என்று சந்தேகம் இருக்கிறது போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வில்லை எனில் நாங்கள் மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பாக தீக்குளிப்பதை தவிர வேறு வழி இல்லை என்று கண்ணீர் மல்க சந்திரனும் பாண்டியம்மாள்ம் கூறினார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: