ஆசிரியர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற ்சி: முதல்வர்:

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி:

மதுரை:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரி பிரார்த்தனை மற்றும் தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அகத்தர உறுதிமைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.
கல்லூரிச் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக மதுரை, எம்.எஸ்.செல்லமுத்து மனநலம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் முதல்வர் பேராசிரியர் ஜி.குருபாரதி, “நேர்மறையான மன ஆரோக்கியத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு கலந்துரையாடல் மூலம் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்விற்கு, வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் செல்லப்பாண்டியன் நன்றியுரை ஆற்றினார். வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் வீ.முருகன் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: