பாரத ஸ்டேட் வங்கியில், உயிர் வாழ் சான்றி தழ் வழங்கும் விழா:

*மதுரை பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகத்தில்*
*மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கல் முகாம்*

மதுரை:

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம், பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடைபெற்றது.

மதுரை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில், பெரும் அளவில் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ‘மின்னணு உயிர் வாழ் சான்றிதழ்’ வழங்கப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசின் ஓய்வூதியர்கள், தங்கள் இருக்கும் இடத்திலிருந்துடிஜிட்டல் முறையில் தங்களது தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதற்காக அவர்கள் அடிக்கடி வங்கிக்கு செல்ல தேவையில்லை.

இந்த முகாமில், மத்திய ஓய்வூதியத் துறை துணைச் செயலாளர் சக்கரவர்த்தி, தனி செயலாளர் தீபக் புந்தீர், வங்கி துணை பொது மேலாளர் ஆனந்த், மண்டல மேலாளர் ஹரிணி உள்ளிட்ட வங்கி அலுவலர்களும், தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் சங்க பொறுப்பாளர்கள் சுகுமார், ராஜகோபால், நடராஜன், யூஐடிஏ ஐ., (UIDAI) திட்ட மேலாளர் நவ்ஷத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: