வாக்குச் சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்:

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

சோழவந்தான் நவம்பர் 13

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வாடிப்பட்டியில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. தமிழக முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை வழங்கினார். வாடிப்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன், கோவிந்தராஜன், ஜெயராமன் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால. ராஜேந்திரன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், அலங்காநல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் பரந்தாமன், தன்ராஜ் வரவேற்றனர். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சோழவந்தான் பேரூராட்சி துணை தலைவர் லதா கண்ணன் வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக் மாவட்டம் மகளிர் அணி ரேணுகா ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்பிரமணி, கட்டகுளம் தனலட்சுமி கண்ணன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, அலங்காநல்லூர் ஒன்றிய மாணவரணி செயலாளர் பிரதாப் தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் திருவேடகம் ஊராட்சி செயலாளர் ராஜா என்ற பெரிய கருப்பன் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்ரமணியன்.உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தானில், வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்: அமமுக பேரூர் செயலாளர் திரவியம் பார்வை:
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், அமமுக செயலாளர் மகேந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி, சோழவந்தான் பகுதியில் நடைபெறும் வாக்காளர் பெயர் நீக்கல் சேர்த்தல்,சிறப்பு முகாமினை, சோழவந்தான் பேரூர் செயலாளர் திரவியம் வாக்குச்சாவடி என் ஒன்றில் பேட்டையில் பார்வையிட்டார். அவருடன் ,வார்டு செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: