பெருந்திருவிழா:

விருதுநகரில், ஸ்ரீசீனிவாசப்பெருமாள் கோவில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது:

விருதுநகர் :

விருதுநகர் ஸ்ரீராமர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீசீனிவாசப்பெருமாள் சன்னதியில், புரட்டாசி மாத பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, ஸ்ரீசீனிவாசப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர், சன்னதியில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீசீனிவாசப்பெருமாள் – ஸ்ரீதேவி – பூதேவி சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் பிரமோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் ஸ்ரீசீனிவாசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், வரும் அக்டோபர் 5ம் தேதி (புதன் கிழமை) நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: