பாஜக தலைவர் மீது காங்கிரஸ் புகார்:

மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான கருத்து தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார்:

மதுரை:

பாஜக தேசிய தலைவர் ஜே. பி .நட்டா, கடந்த சில தினங்கள் முன்பு மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 95% நிறைவடைந்து விரைவில் பிரதமர் திறந்து வைப்பார் எனக் கூறியதால் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், 95% நிறைவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று பதாகைகளுடன் எம்பிகள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி
தகவல் அறியும் உரிமை பிரிவு தலைவர் வக்கீல் கனகராஜ், தகவல் அறியும்உரிமை சட்டப்பிரிவு பொதுச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்து பரப்பியதாக ,பாஜக தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா மீது புகார் கொடுத்தனர்.
தொடர்ந்து ,எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தகவல்களை தெரிவிக்க சுகாதாரத்துறை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தான் தெரிவிக்க வேண்டும். ஆனால் ,
பாஜகவில் தேசிய தலைவர் என்பதால் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்துக்களை பரப்ப கூடாது என, காங்கிரஸ் கட்சி
தகவல் அறியும் உரிமை பிரிவு தலைவர் கனகராஜ், கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: