பலத்த மழை:

சிவகாசி, திருவில்லிபுத்தூர் பகுதிகளில் பலத்த மழை…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் திருவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் போல கடுமையான வெயில் இருந்து வந்தது. மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி, மேகங்கள் திரண்டு வந்தாலும் மழை பெய்யாத நிலையே இருந்து வந்தது. நேற்று இரவு சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. திருவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகாசி மற்றும் சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலையில் இருந்து, அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்து வருகிறது. இதனால் சில நாட்களாக இருந்து வந்த கடுமையான வெட்கை சற்று குறைந்துள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: