சாலை மறியல்:

வாடிப்பட்டியில்
தற்கொலை செய்தவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் :

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகரில் குடியிருந்து வந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 28).
இவரது மனைவி அம்சவல்லி ( 28).
இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மோனித் என்ற மகனும் மகிஷா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ,நேற்று காலை வாடிப்பட்டி அருகே உள்ள ஜவுளி பூங்காவில் அம்சவல்லி வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய நிலையில் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தனது கணவர் நவநீதகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர்,
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நவநீதகிருஷ்ணன் உடலை மீட்டனர்.
இது சம்பந்தமாக , தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் வழக்கு ப்
பதிவு செய்து நவநீத கிருஷ்ணன் உடலை வாடிப்பட்டிஅரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நவநீதகிருஷ்ணனின் சொந்த ஊரான கேரளாவில் இருந்து வந்த அவரது உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து , வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.
தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: