கண்மாய், வாய்கால் சீரமைப்பு: ஆட்சியர் ஆய் வு:

திருப்புவனம் வட்டத்தில் கண்மாய்கள்; மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு:

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக, நீர்வளத்துறையின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட நெல் முடிக்கரை குரூப் திருப்புவனம் கண்மாயில் மாவட்ட ஆட்சித்தலைவர், நேரில் ஆய்வு மேற்கொண்டார். இக்கண்மாயில் நான்கு மடைகள் உள்ளன. இதில் நான்காவது மடையிலிருந்து கலியாந்தூர் பாசனப்பகுதி ஒரு பிரிவாகவும், நயினார்பேட்டை மற்றும் மூன்று வாய்க்கால்கள் ஒரு பிரிவாகவும், நான்காவது மடையின் பின்புற தொட்டியில் இருந்து பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் நயினார்பேட்டை மற்றும் மூன்று வாய்க்கால்கள் (கரிசல் வாய்க்கால், மேட்டு வாய்க்கால் மற்றும் மாவடி பச்சேரி வாய்க்கால்) மடையின் 440-வது மீட்டரில் நான்கு பிரிவாக பிரிந்து செல்கிறது.

பாசன நீர் பங்கீடு செய்வதில் நைனார்பேட்டை கிராமத்தினருக்கும், திருப்புவனம் மற்றும் திருப்புவனம் புதூர் கிராமத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக, நீதிமன்ற வழக்கு எண்:13522016 உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்று வந்த நிலையில், நீதி அரசரின் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர், (நீ.வ.து) வைகை வடிநில வட்டம், சிவகங்கை அவர்களால் கூட்டுப் புல கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தியதன் பெயரில், இன்றையதினம் திருப்புவனம் கண்மாய் நான்காவது மடையில், நயினார்பேட்டை மற்றும் திருப்புவனம் பாசன விவசாயிகள் முன்னிலையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், தட்டான்குளம் படுகை அணைக்கு கீழ் வலது பிரதான கால்வாயில் பழையனூர், பிரமனூர் மற்றும் 19 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயில் வைகை ஆற்றுக்கும் வலது பிரதான கால்வாய்க்கும் இடையில் உள்ள தடுப்புச்சுவர் வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளதையும், மாவட்ட ஆட்சியர் , நேரில் ஆய்வு செய்து, சேதம் அடைந்த சுவற்றை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் விரைந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, பாசன நீர் வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, பார்த்திபனூர் மதகணை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு பாசன வசதி அளிக்கும் இடது பிரதான கால்வாயில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, இக்கால்வாயில் உள்ள முட்செடிகள் மற்றும் சீமை கருவேலை மரங்களை அகற்றும் பணிகளை, மழைக்காலத்திற்கு முன்பு தொடங்கிடவும், பருவமழை காலங்களில் பெறப்படும் மழைநீரினை முறையாக சேமிப்பதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, கீழ்வைகை வடிநிலக் கோட்டம் கண்காணிப்புப் பொறியாளர் கிறிஸ்டர் நேசகுமார், நீர்வளத்துறை (சருகனியாறு, வடிநிலக் கோட்டம்) செயற்பொறியாளர், பாரதிதாசன், உதவிப்பொறியாளர்கள் திரு.பூமிநாதன், செந்தில்குமார், முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் திர
முத்துப்பாண்டி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: