சுற்றுசூழல் பாதுகாப்பு:

காரியாபட்டி அருகே பள்ளிகளில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் நடுதல் முகாம்.

காரியாபட்டி, செப் 22

காரியாபட்டி பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாக்க மரக்கன்றுகள் நடும் பணியினை சமுத்திரம் அறக்கட்டளை முன்னெடுத்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதனையொட்டி நேற்று பெ.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமுத்திரம் அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமை வகித்தார். சமுத்திரம் அறக்கட்டளை நிறுவனர் மங்களேஸ்வரி முன்னிலை வகித்தார். சமுத்திரம் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராஜா வரவேற்றார். காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எஸ்.ஐ அசோக்குமார், ஆனந்தஜோதி, சுரபி டிரஸ்ட் விக்டர், பசுமை பாரதம் ஆசிரியர் பொன்ராம், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் , சுற்றுபுறச்சூழலை பாதுகாக்க நமது கடமைகள் குறித்தும், மரம் வளர்ப்பு பயன்கள் குறித்து பேசினார்கள். மேலும் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை தேர்வு செய்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டனர். அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் அருண்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி அருகே அரசு பள்ளிகளில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பாக ஏற்படுத்தி மரக்கன்றுகள் நடுதல் முகாமை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: