முன்னாள் சபாநாயகர் மறைவு:

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா காலமானார்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர்.2000 வரை அதிமுகவில் அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் "சேடபட்டியார்" என்று அழைக்கப்பட்டார். அதிமுக சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அடல் பிகாரி வாச்பாய் தலைமையேற்ற நடுவண் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: