செல்போன் டவர் மாயம்:

திருவில்லிபுத்தூர் அருகே செல்போன் டவர் மாயம்…..

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள விழிப்பனூர் பகுதியில் சோலையப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தில், சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனம் செல்போன் டவர் அமைத்திருந்தது. இதனை சென்னையைச் சேர்ந்த முத்துவேங்கடகிருஷ்ணன் (52) என்பவர் மேற்பார்வை செய்து வந்தார். ஏர்செல் சேவைகள் கடந்த 2017ம் ஆண்டு நிறுத்தப்பட்டதால், இந்த செல்போன் டவர் செயல்படாமல் இருந்தது. இந்த நிலையில் டவர் நிறுவனத்தின் பொறியாளர் ஜெகதீசன், கடந்த ஆண்டு மார்ச் மாதம் செல்போன் டவரை ஆய்வு செய்ய வந்த போது அங்கிருந்த டவர், ஜெனரேட்டர், பேட்டரி உள்ளிட்ட சுமார் 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து ஜெகதீசன், திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி கிருஷ்ணன்கோவில் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: