மழை: விமானங்கள் இறங்க தாமதம்:

50 நிமிட தாமத்திற்கு பின் 3 விமானங்களும் மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கின:

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் மாலை 6 மணிக்கு இறங்கவேண்டிய பெங்களுரு, 6.20 மணிக்கு இறங்கவேண்டிய சென்னை விமானம். 6.40 மணிக்கு இறங்கவேண்டிய
ஹைதராபாத் விமானம் ஆகிய 3 விமானங்களும், மதுரை விமான நிலையத்தில் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்காமல் 50 நிமிடம் சுற்றிதிரிந்தது.
இதனால், மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களில் பரபரப்பாக காணப்பட்டது.
பின்னர், 50 நிமிட தாமத்திற்கு பின் வானிலை சீரானவுடன் விமானங்கள் தரையிறக்கப்பட்டது.
சென்னை செல்லவேண்டிய விமானம் 87 பயணிகளுடன் 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
மதுரை நகரில் அண்ணாநகர், கருப்பாயூரணி, கோரிப்பாளையம், வில்லாபுரம், அவனியாபுரம் பகுதிகளில், திடீரென மழை பெய்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: