குடமுழுக்கு:

சோழவந்தான் அருகே மேலமாத்தூர் காமாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் செப்டம்பர் 12

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலமாத்தூர் காமாட்சிபுரம் கிழக்குத் தெரு மக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்றைய முன் தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. நேற்று ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி புதிய சிலைகளை திறந்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விக்னேஸ்வர பூஜை உடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. பூர்ணா ஹூதி நிறைவுற்று சண்முகநாத குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய குடங்களை சுமந்து திருக்கோவில் வலம் வந்தனர். காலை சுமார் 9 40 மணி அளவில் மேளதாளம் அதிர்வேட்டுக்கள் முழங்க கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பால லிங்கம், கருப்பணசாமி, ஆகிய தெய்வங்களுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கோவில் முன்பாக அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை காமாட்சிபுரம் கிழக்குத் தெரு பொதுமக்கள், மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். கீழமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்தி துரைப்பாண்டி, மேலமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி மணிகண்டன், துணைத் தலைவர் காந்திராஜா, திருக்கோவில் நிர்வாகிகள் மலைச்சாமி, மகாலிங்கம், துரைப்பாண்டி, மலையாண்டி, பாண்டி ,திருமுருகன், பரமேஸ்வரன், மூர்த்தி ,ஈஸ்வரன் மற்றும் மேலமாத்தூர், கீழமாத்தூர், கொடிமங்கலம், தாராப்பட்டி, மேலக்கால் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: