கவுன்சிலர் வீட்டில் திருட்டு:

அருப்புக்கோட்டை நகராட்சி கவுன்சிலர் வீட்டின் கதவை திறந்து நகை, பணம் திருட்டு:

அருப்புக்கோட்டை :

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காட்டுபாவா தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (40). இவர், அருப்புக்கோட்டை நகராட்சியின் 10 -வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அப்துல்ரகுமான் ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். வேலை விஷயமாக வீட்டைப் பூட்டிச் சென்ற அவர், இரவு வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், அருகில் இருந்தவர்களின் உதவியோடு, அப்துல்ரகுமான் வீட்டின் கதவை திறந்தார். வீட்டிலிருந்த பீரோ கதவு திறந்து கிடந்ததுடன், பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் ,
பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்கநகைகள், 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, அப்துல்ரகுமான் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், திமுக கவுன்சிலர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில், நகராட்சி கவுன்சிலரின் வீட்டு கதவை திறந்து நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: