பெருமாள் ஆலய பாலாயம்:

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் பாலாலய விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள மிகப்பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கும்பாபிஷேக புணரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முன்னோட்டமாக.கோவில் முன்பாக நடைபெற்ற பாலாலய நிகழ்வை ஸ்ரீவத்சன் குழுவினர் நடத்தினர். நிர்வாக அதிகாரி இளமதி, சோழவந்தான் கோவில் சரக ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற பாலாலய விழாவில் கணக்கர் பூபதி, ஆலய பணியாளர் வசந்த், திருப்பணிக்குழு நிர்வாகிகள் தலைவர் வழக்கறிஞர் டி கே கோபாலன், பொருளாளர் ராமச்சந்திரன் என்ற சங்கர் சாமி, கேபிள் ராஜா, கிராம தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மீனாட்சி சுந்தரம் என்ற குமார், மூலக்கடை ஜவகர், சக்கரவர்த்தி, முத்துராமலிங்கம்,மதுரைவீரன், மார்நாட்டான், பழனிவேல்,இளங்கோவன், கிருஷ்ணன், நாகு ஆசாரி, ஞானசேகரன், பாஸ்கரன், பழனியாண்டி, அருண் பிரசாத், ரவி, டீக்கடை ராஜேந்திரன் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: