மாணவர்கள் கலைக் கூடல் நிகழ்ச்சி:

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி:

மதுரை:

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.
செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள், கலைக்கூடல் நிகழ்ச்சியில் கிராமிய நடனம், மௌன மொழி நாடகம், கதை சொல்லுதல், ஹிப் ஹாப் இசை பாடல், ஸ்டார்ட் அப் காமெடி, தனித்திறன் நிகழ்ச்சி, நகைச்சுவை நாடகம், நாட்டுப்புற பாடல் மற்றும் தேச பக்தி நடனம் ஆகிய நுண்கலை திறமைகளை மாணவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தினர். மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர் பெருமாள் நன்றி உரை வழங்கினார்.
மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவர் ஸ்ரீதேவபாரதி நிகழ்ச்சியை இனிதே தொகுத்து வழங்கினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: