பேரூராட்சி கவுன்சில் கூட்டம்:

காரியாபட்டியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்:

காரியாபட்டி:

காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. திமுக பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரூபிசந்தோசம், செயல் அலுவலர் ஸ்ரீ ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் வியக்கத் அலி, முனீஸ்வரி, முஸ்தபா, சங்கரேஸ்வரன், வசந்தா, நாகஜோதி, சரஸ்வதி தீபா, செல்வராஜ், முத்துக்குமார், அதிமுக கவுன்சிலர்கள் ராமதாஸ், திருக்குமாரி உட்பட அனைத்து பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
காரியாபட்டி பேரூராட்சி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க அம்ரூத் 2.0 திட்டத்தில் சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வர தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே ,பொது மக்களின்
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவுரையின் படி, கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது.
மேலும்,
திருச்செந்தூர் தூத்துக்குடி விரைவு பேருந்துகள் நகருக்குள் வந்து செல்ல வேண்டும். ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு இருசக்கர வாகன காப்பகம் அமைக்கப்படும என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: