மதுரையில் டெங்குவை கட்டுப்படுத்த அரசு நட வடிக்கை தேவை: முன்னாள் அமைச்சர்:

அதிகரித்து வரும் டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:

முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் வேண்டுகோள்:

மதுரை:

பருவமழை காலக்
கட்டங்களில் அதிகமாக டெங்கு பரவி வருகிறது, மக்கள் விழிப்புடன் இருந்து கவனமாக கையாள வேண்டும்,

மதுரையில், டெங்குவினால் 4 வயது சிறுமி பலியானது மிகவும் வேதனை அளிக்கிறது.
மேலும் ,12 பேர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

டெங்கு கொசு நல்ல தண்ணீரில் உற்பத்தியாகி, வேகமாக இனப்பெருக்கம் செய்யும், பொதுவாக வீடுகளில் உள்ள சிரட்டைகள், தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் தண்ணீர் இருந்தால் டெங்கு கொசு உற்பத்தியாகும்.
குறிப்பாக ,பருவமழை காலத்தில் தான் இனப்பெருக்க பெருகும்.
ஆகவே, தமிழக அரசு டெங்குவை ஒழித்திடும் வண்ணம் மக்களுக்கு உரிய விழிப்புணர்வு நடவடிக்கையையும், மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று,
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: