மதுரை மாவட்ட கோயில்களை, திண்டுக்கல் கோட் டத்துடன் இணைக்க எதிர்ப்பு:

உசிலம்பட்டி பகுதி கோயில்களை திண்டுக்கல் மண்டலத்துடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு:

மதுரை:

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள கோயில்களை இந்து சமய அறநிலை ஆட்சித் துறையினர், திண்டுக்கல் கோட்டத்துடன் இணைப்பதற்கு பகுதி மக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ,ஏழுமலை , சிந்துபட்டி, மேலத்தெருமாணிக்கம், ஜோதிமாணிக்கம், பேரையூர் ,கல்லுப்பட்டி,ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கோயில்கள் தற்போது, மதுரை மண்டல இணை ஆணையர் மற்றும் மதுரை
உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது .
இவை, பல ஆண்டுகளாக மதுரை மண்டபத்தில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், கிராம கோயில்கள் பூசாரிகள், நிர்வாகிகள் அனைவரும் கோயில் பணிகள் தொடர்பாக மதுரைக்கு சென்று வர ஏதுவாக உள்ளது. திண்டுக்கல் என்பது சாத்தியமற்றது என, கிராம கோயில்கள் பூசாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது, உசிலம்பட்டி பகுதி கோயில்களை திண்டுக்கல் மண்டலத்துடன் இணைக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாம். இதற்கு ,உசிலம்பட்டி பகுதி மக்கள் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர். அத்துடன், உசிலம்பட்டி பகுதி கோயில்களை தொடர்ந்து, மதுரை மண்டலத்துடன் இருக்க வேண்டும் என்றும், திண்டுக்கல் மண்டலத்தில் இணைக்க கூடாது என்று, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆகவே தமிழக இந்து சமய அறநிலை ஆட்சித் துறை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை செயலாளர், ஆணையாளர் ஆகியோர்கள் துரித நடவடிக்கை எடுத்து, உசிலம்பட்டி பகுதிகளை உள்ள கோயில்களை தொடர்ந்து ,மதுரை மன்றத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: