மதுரையில் மழை:

அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெய்த மழையால் மருத்துவமனையில், பல இடங்களில் கட்டிட சுவர்கள் பெயர்ந்து விழுந்து விபத்து: நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சி:

மதுரை:

தென் மாவட்டங்களை பிரதானமாக கொண்டு செயல்பட்டு வரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில், உள்ள பல கட்டிடங்கள் கட்டி சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவைகளை புனரமைப்பு செய்யவும், புதிய கட்டிடங்களை கட்டவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த சூழலில், மதுரையின் நகர் பகுதிகளில் பெய்த மழையால் ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல வார்டுகளில் உள்ள மேற்கூரை சுவர்கள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளன.
3 -வது தளத்தில் உள்ள 90 வார்டு புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த லேப்ரோஸ்கோப்பி கருவி உள்ளிட்ட மருத்துவ கருவிகள் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கருவிகள் சேதமடைந்து உள்ளன. மேலும், அந்த வார்டின் வெளிப்புற ஜன்னலின் மேலிருந்த மேற்கூரை சுவர்கள் பெயர்ந்து விழுந்ததில் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாகியது.
இதே போல, குழந்தைகள் வார்டிலும் மேற்கூரை சுவர்கள் பெயர்ந்து விழுந்துள்ளன.
நல்வாய்ப்பாக, இந்த விபத்துக்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில்,
இட நெருக்கடி காரணமாக வார்டுகளை மாற்றி அமைப்பது, புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு உண்டான வாய்ப்புகள் இல்லை என, மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தென் தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கட்டிடங்களை முறையாக பராமரித்து, உயிர் காக்க வந்த நோயாளிகள் உயிர் காக்க பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: