குளத்தில் மூழ்கி இரு பெண்கள் சாவு:

திருவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் மூழ்கி 2 பெண்கள் பரிதாப பலி…..

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருமுக்குளம். இந்த குளத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் குளிப்பது வழக்கம். இந்த நிலையில் திருமுக்களத்தில் குளிக்கச் சென்ற பொதுமக்கள், குளத்தில் 2 பெண்களின் உடல்கள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குளத்தில் மிதந்த இரண்டு பெண்களின் உடல்களை மீட்டு, திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண்கள் யார், எந்த ஊர், இவர்கள் பெயர் விவரம் என்ன, குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தார்களா, அல்லது குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: