பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர் கள் குறித்து பேச விரும்பவில்லை; அமைச்சர்:

பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை – பாஜகவினர் தாக்குதல் குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள லயோலா ஐடிஐ கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது பாஜகவினர் தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது :

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்வது குறித்து இரண்டு நாட்களாக ராணுவத்தினரை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன், தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் பேசுவதற்கான சரியான தருணம் இல்லை, பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை, பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும், பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன் என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: