சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி:

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி:

சோழவந்தான், ஆகஸ்ட்: 13.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கத்தின் படி
தமிழக முதல்வர், ஆணைக்கிணங்க.திட கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது மற்றும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, சோழவந்தான் காவல் நிலையத்தில் துவங்கி பேரூராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.
சைக்கிள் பேரணியினை, சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ்.எஸ்.கே. ஜெயராமன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன்,
துணைத் தலைவர் லதா கண்ணன்,
மற்றும் பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் பேரூராட்சி கவுன்சிலர்கள்
சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணியில், விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
பேரணியின் முடிவில், 75 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர்,அனைத்து மாணவர்களுக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டு மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: