இருக்கன்குடி மாரியம்மன் திருவிழா:

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி வெள்ளி திருவிழாவை காண, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்…..

சாத்தூர் :

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இங்கு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி கிழமை திருவிழா, கடந்த ஒரு வாரமாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் பூரண சிறப்பு அலங்காரத்தில் பல்லாக்கில் எழுந்தருளிய இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ரதவீதிகளில் பவனி வந்தார். பல்லாயிரக்கண்கான பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷமிட்டு அம்மனை வணங்கினர். ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை மாவட்டங்களிலிருந்து இருக்கன்குடிக்கு, அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: