ஆம்னி பஸ்நிலையத்தில், போக்குவரத்து அதிகா ரிகள் ஆய்வு:

மதுரை மாட்டுதாவனி ஆம்னி பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு:

மதுரை:

தொடர் விடுமுறை காரணமாக ,வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என, போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளில் கட்டண வசூல் செய்வது குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் செல்வம் சிங்காரவேல் சித்ரா ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 3 குழுக்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நாகர் கோயில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்த 20க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: