ஆக.15ல் கிராம சபை: ஆட்சியர்:

விருதுநகர் மாவட்ட ஊராட்சிகளில், ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம்…
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…..

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் அனைத்திலும், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், குடிநீர் பயன்பாட்டு முறைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கிராம ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள், திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: