ஆற்றில் மூழ்கியவரை தேடும் பணி: எம்.எல்.ஏ:

ஆற்றில் மூழ்கி மாயமான ராணுவ வீரரை தேடும் பணியை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை ஆற்றில் நேற்று மாலை குளிக்க சென்ற ராணுவ வீரர் உட்பட இருவர் மாயமானதை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் வைகை ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாலை ஒருவரை பிணமாக மீட்டனர்.
ராணுவ வீரரான,
மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ,மீட்பு பணியினை பார்வையிட்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, சோழவந்தான் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையை சேர்ந்த அதிகாரி களிடம் தேடும் பணியை தீவிரப் படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இதில் ,சோழவந்தான் பேரூராட்சித்
தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், மாணவரணி மருதுபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சோழவந்தான் பேரூர் செயலாளர் ஸ்டாலின், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் அண்ணாதுரை, நிர்வாகி சி பி ஆர் சரவணன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி,
மாணவர் அணி எஸ். ஆர். சரவணன், மேல க்கால்
பன்னீர்செல்வம் , விவசாய பிரிவு வக்கீல் முருகன், ஊத்துக்குளி ராஜா ,இளைஞர் அணி வெற்றி செழியன், மேலக் கால் ஊராட்சி மன்றத்
தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் ,துணைத் தலைவர் சித்தாண்டி, ஒன்றியக்
கவுன்சிலர் சுப்பிரமணி, திருவேடகம்.ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், ராஜா என்ற பெரிய கருப்பன்,
மற்றும் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள், வாடிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: