கிராம சபைக் கூட்டம்: மக்கள் நீதி மையம்:

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்… மக்கள் நீதி மய்யம் கோரிக்கை மனு…..

விருதுநகர் :

விருதுநகர் மத்திய மாவட்ட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆட்சியரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில், வரும் சுதந்திர தினத்தன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, தேசப் பாதுகாப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்திட வேண்டும். மக்களை கடுமையாக பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட அனைத்து வகை ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக கொடுக்கப்பட்டது என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: