சாலை விபத்தில், வாலிபர் சாவு:

அருப்புக்கோட்டை அருகே, சாலை விபத்தில் வாலிபர் பலி…..

அருப்புக்கோட்டை :

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகணேசன் (22). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அருப்புக்கோட்டையில் வேலையை முடித்துவிட்டு, முத்துகணேசன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். மதுரை – அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் கிடந்த மணலில் வண்டி ஏறி, சறுக்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய முத்துகணேசன் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துகணேசன், சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: