நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்:

திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூடைகள் மழை நீரில் நனைந்து புல் முளைத்து:

மதுரை:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி பகுதியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் , தனியார் நிலத்தில் வாடகைக்கு திறந்தவெளியில் நெல் சேமிப்பு கிட்டங்கி அமைந்துள்ளது.
இங்கு, ஐந்து ஏக்கர் பரப்பளவில் நெல் மூடைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,
கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையில், நெல் மூடைகள் மழை நீரில் நனைந்து புல் முளைத்து சேதம் ஆகி வருகின்றன.
இதனை பாதுகாக்கும் வகையில் விரைவில் வரும் ஆண்டில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் புதிய கட்டிடம் அமைத்து மாற்றப்பட்ட உள்ளதாக ,மாவட்ட வருவாய் அலுவலர். சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர். அபிநயா உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: