கண் தானம் குறித்து விழிப்புணர்வு:

விருதுநகரில், கண்களை கட்டிக்கொண்டு கண் தானம் குறித்து விழிப்புணர்வு யோகா…..

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள யோகாசன பயிற்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கண் தானம் குறித்து விழிப்புணர்வு யோகாவை நடத்தினர். இந்த விழிப்புணர்வு யோகாவில் மதுரை, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளைச் சேர்ந்த யோகாசனம் கற்றுக்கொள்பவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள், கலந்து கொண்டனர். கண் தான விழிப்புணர்வு குறித்து, கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு யோகாசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சி, நோபல் உலக சாதனை பதிவிற்காகவும் நடைபெற்றது. உலக சாதனை பதிவு நிறுவன இயக்குனர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சாதனை மற்றும் விழிப்புணர்வு யோகாவில் 27 வகையான யோகாசனங்களை, கண்களை கட்டிக் கொண்டு செய்து, பார்வையாளர்களை கவர்ந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட யோகாசன பயிற்சியாளர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: