குளத்தில் மூழ்கி மகனுடன், தாய் மரணம்:

திருவில்லிபுத்தூரில் சோகம்…
குளத்தில் மூழ்கி மாற்றத்திறனாளி மகனுடன், தாய் மரணம்…..

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஓட்டமடம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி முத்துமாரி (33). இவர்களது மகன் மாரீஸ்வரன் (8). மாரீஸ்வரன் பிறந்தது முதல் நடக்க முடியாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாவார். சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பன் இறந்து போனார். கணவர் இறந்த பின்பு, பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை முத்துமாரி மறுமணம் செய்து கொண்டு கோயம்புத்தூரில் வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான தனது மகனுக்கு உதவித்தொகை பெறுவதற்கான வாழ்நாள் சான்று பெறுவதற்காக திருவில்லிபுத்தூருக்கு முத்துமாரி தனது மகனுடன் வந்திருந்தார். அங்கு உறவினர் வீட்டில் தங்கிய முத்துமாரி, தனது மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் திருவில்லிபுத்தூரில் உள்ள மடவார் வளாகம் தெப்பக்குளத்தில் மூழ்கி முத்துமாரியும், அவரது மகன் மாரீஸ்வரனும் இறந்த நிலையில் மிதந்தனர். இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், குளத்தில் மூழ்கி இறந்து கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: