ஓபிஎஸ்க்கு ஆதரவு:

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வின் மதுரை மேற்கு தொகுதியில்,
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்:

மதுரை:

மதுரை மாநகர் மாவட்டம், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
கீழ மாத்தூர், மேலமாத்தூர், கொடிமங்கலம், தாராப்பட்டி ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன..
இது தொடர்பாக, கீழமாத்தூர் ஊராட்சி கழக செயலாளர் துரைப்பாண்டியன் கூறும்போது:
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். கட்சியின் இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு பொறுப்புக்களை திறம்பட கையாண்டவர்.
எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஓபிஎஸ் மீது பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டிலை வீசியது கண்டனத்திற்கு உரியது.
அதனால், தமிழகத்தில் தற்போது ஓபிஎஸ்க்கு ஆதரவு பெருகி வருகிறது.
ஒற்றை தலைமை என்று முடிவு செய்யப்பட்டால், ஓபிஎஸ் பொதுச்செயலாளராக முழு தகுதி உடையவர். அவருக்கு ஆதரவாக துணையாக இருப்போம் இது சம்பந்தமாக கிளைக் கழகத்தில் தீர்மானம் இயற்றியுள்ளோம்.
விரைவில் காவல்துறை அனுமதி பெற்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.
இதில், கீழ மாத்தூர், மேலமாத்தூர், தாராப்பட்டி , கொடிமங்கலம் ஆகியபகுதிகளிலிருந்து அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: