சிவகாசியில், அச்சக நிறுவனத்தில் தீ விபத் து:

அச்சக நிறுவனத்தில் தீ விபத்து… ஜெனரேட்டர் எந்திரம் எரிந்து சேதம்:

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம், சிவகாசி – திருத்தங்கல் சாலையில் உள்ள காரனேசன் காலனி பகுதியில், சுதர்சன் என்பவருக்கு சொந்தமான அச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்தப்பகுதியில் திடீர் மின்தடை ஏற்பட்டதால், அச்சகத்தில் இருந்த ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. மின்சாரம் வந்தவுடன் ஜெனரேட்டரை நிறுத்த முயன்றபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஜெனரேட்டர் தீப்பிடித்து எரியத்
துவங்கியது. உடனடியாக, சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ஜெனரேட்டர் இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமானது.
விபத்து குறித்து, சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட அச்சகத்தின் பின் பகுதியில், பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: