அவனியாபுரம் அருகே பெட்ரோல் பங்கில் வழிப ்படி:

அவனியாபுரம் தனியார் பெட்ரோல் பல்கில் பைக்கில் வந்த 4 பேர் வழிப்பறி:

மதுரை:

பைக்கில் வந்த 4 பேர்
டிரைவரிடமிருந்து ரூபாய் 4650 பறித்து தப்பி ஒட்டம் பிடித்துள்ளனர்.
பைக்கில், பெட்ரோல் பங்கில் வரும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் புறவழி சாலையில் தனியார் பெட்ரோல் பங்கு உள்ளது.
நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா ராம்பூர் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் மகன் குருநாதன் (வயது 49). என்பவர் டிரைவராக பணிபுரிகிறார்.
இவர் லாரிக்கு
டீசல் போடபணம் எடுத்து வந்த போது, பைக்கில்
பின்னால் வந்த 4 பேர், குருநாதன் கையிலிருந்த ரூபாய் 4650 பணத்தை பறித்து சென்றனர்.
குருநாதன் கூச்சல் போடுவதற்குள் பைக்கில வேகமாய் தப்பி ஓடினர்.
வழிப்பறி செய்த 4 பேரும் கர்சீப்பால் முகத்தை மூடி சென்றுள்ளனர்.
இது குறித்து, அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: