மாநில அளவிலான சிலம்பப் போட்டி:

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி காரியாபட்டி மாணவர்கள் சாதனை:

காரியாபட்டி, ஜூன் :22.

மாநில அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர் .
சேலம் மாவட்டம் ஆத்தூர் வசிஷ்ட சிலம்பம் அகாடமி சார்பில் 2வது மாநில அளவிலான நடைபெற்ற சிலம்பாட்டபோட்டி நடைபெற்றது .
இ‌தி‌ல், 13 மாவட்டத்தில் இருந்து 600கும் மேற்பட்ட மாணவர்கள் ப‌ங்கு பெற்றார்கள், இதில், அருப்புக் கோட்டை ஐ.எஸ்.எப். அகாடமி சார்பில் மாணவ மாணவிகள் 29 பேர் மினி சப் ஜுனியர், சப் ஜுனியர், ஜூனியர் பிரிவில் 4 பிரிவில் பங்கு பெற்று மொத்தம் 85 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் 3 ஆம் இடம் பிடித்தனர்.
இதில், ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, வேல் கம்பு வீச்சு, சுருள் வாள் வீச்சு, வாள் வீச்சு, மான் கொம்பு வரிசை, கம்பு சண்டை ஆகிய பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில். வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர்கள் சங்கர் கணேஷ் நந்த குமார், சிவலிங்கம் ஆகியோர் வாழ்த்தினார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: