இருசக்கர வாகனத்தில், கஞ்சா கடத்திய இருவர ் கைது:

இருசக்கரவாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது:
8 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல்:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில், உள்ள சோதனைச்சாவடியில்
போதை தடுப்பு காவல் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நெல்லூரை சேர்ந்த முத்துபாண்டி, ஆத்தூர் தாலுகா சித்தரேவை சேர்ந்த ரோஷன் ( 20), என்பதும் இருசக்கரவாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்தியதும் தெரிய வந்தது.
மேலும், இருவரையும் கைதுசெய்த போலீசார் அவர்கள் கடத்திவந்த 8 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, வழக்கு பதிவுசெய்து, வாடிப்பட்டி போலீசார் மேலும், விசாரிக்கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: