திருமங்கலத்தில் காங்கிரசார் போராட்டம்:

திருமங்கலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார், பிரதமர் மோடி -யைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்:

மதுரை:

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து காங்கிரசார் கண்டன முழக்கம் செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் இராஜாஜி சிலை முன்பு , மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மோடி அரசைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சம்பந்தமாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து, பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரசார் முழக்கமிட்டனர்.
‘ காங்கிரசின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக, பிரதமர் மோடி பல்வேறு பொய் வழக்குகளைத் தொடுத்து வருவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: