அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு:

சாத்தூர் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…..

சாத்தூர் :

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் திடீர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில், அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகள் உள்ளதா என்பது குறித்து எம்எல்ஏ ஆய்வு செய்தார். ஆய்வின் போது உள் நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, நுண்கதிர் அறை, மகப்பேறு பிரிவு உள்ளிட்டவைகளை எம்எல்ஏ ரகுராமன் ஆய்வு செய்தார். மேலும் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் உணவு வசதிகள் குறித்தும், மருத்துவ சேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த மருத்துவர்களிடம், மருத்துவமனை செயல்பாடுகள் மற்றும் தேவைப்படும் வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆய்வின் போது மருத்துவமனை தலைமை மருத்துவர் முனியகேசவன் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: