இந்தியாவில், மீண்டும் பிரதமர்: மோடி:

இந்தியாவில் மோடி மீண்டும் பிரதமராவார்: அண்ணாமலை:

மதுரை:

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக அதிக இடங்களைப் பெற்று மோடி பிரதமராவார் என , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியது:
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு கட்டங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், பல துறைகளில் லஞ்சம் பெருகி வருவதாகவும்,
இதை
தடுக்க பாரதிய ஜனதா கட்சி போராடி வருவதாகவும்,
பொங்கல் தொகுப்பு முதல் மகளிர்க்கு ஊட்டச்சத்து வழங்கும் வரை உள்ள திட்டங்களில் தவறுகள் நடப்பதாகவும், அதை பாஜக நிர்வாகிகள் சுட்டிக்காட்டினால் ,திமுக அமைச்சர்களுக்கு கோபம் வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மதுரை ஆதீனத்தை பொருத்தவரை, பொறுத்தவரை அவர் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் .
மக்கள் சேவையில் யார் ஈடுபட்டாலும், அவரை ஆதரிப்பது பாஜகவின் கடமையாகும்.
அந்த நிலையில்தான் மதுரை ஆதீனத்தை பாஜக ஆதரிக்கிறது. மேலும் ,மதுரை ஆதீனம் பாஜக உறுப்பினர் அல்ல .
அவர் மீது திமுக அரசு கைவைத்தாள் ,மதுரை மக்களை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
மதுரை பொதுக்கூட்டம் ஆனது பாஜக ஒரு திருப்புமுனையாக அமையும் என்றார்.
இக் கூட்டத்தில், பாஜக மாவட்ட நிர்வாகி டாக்டர் சரவணன், கந்திலி நரசிங்கப் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: