பள்ளிகள் திறப்பு மாணவியருக்கு புத்தகங் கள் வழங்குதல்:

பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன்,
பள்ளிகளில் பார்வையிட்டு, மாணாக்கர்களுக்கு பாடநூல்களை வழங்கினார்:

சிவகங்கை:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன், பார்வையிட்டு, மாணாக்கர்களுக்கு பாடநூல்களை வழங்கினார்.
இந்
நிகழ்வின்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் வருகைப்பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர், மின்வசதி மற்றும் சுகாதாரப்பணிகள், அடிப்படை வசதிகள், கொரோனா நோய் தொற்றின் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், பதிவேடுகள், வகுப்பறைகள், மாணாக்கர்கள் மதிய உணவருந்தும் இடம், சமையற்கூடம் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) பார்வையிட்டு, மாணாக்கர்களுக்கு பாடநூல்களை வழங்கி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தில் மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்பிற்கான பள்ளிகள் திறக்கப்பட உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வகுப்பிற்கான 1,115 அரசு பள்ளிகள், 3 சி.பி.எஸ்.இ.பள்ளிகள், 206 அரசு உதவி பெறும் பள்ளிகள், 28 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 253 சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் 1,605 பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதில், 1-ஆம் வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான 57,079 மாணவர்கள், 58221 மாணவியர்களுக்கு என மொத்தம் 1,15,300 மாணவ, மாணவியர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது. 11, 12-ம் வகுப்பு துவங்கப்பட்டவுடன் அந்த மாணவ, மாணவியர்களுக்கும் பாடநூல்கள் வழங்கப்படவுள்ளன.
பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து, சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிடப்பட்டு, மாணாக்கர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டது.
மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணாக்கர்களுக்கு தேவையான அனைத்து பாடநூல்களும் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் கொரோனா நோய்த்
தொற்றின் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: