மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்:

மின்வாரியத்தில் 52 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்ப கோரி மின் வாரிய மண்டல அலுவலகம்
முன்பாக ஆர்ப்பாட்டம்:

மதுரை:

மின் வாரிய பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும், மின் வாரியத்தில் உள்ள 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரிய பணியாளர்களுக்கு வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்க வேண்டும், மின் வாரியத்தில் பதவி பறிப்பு செயல்களை கைவிட வேண்டும், மின் வாரிய பணியாளர் முத்தரப்பு ஒப்பந்தத்தை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி அனைத்து மின்சாரவாரிய தொழிற்சங்கங்களின் சார்பில் மதுரை மண்டல மின்வாரிய அலுவலகம் முன்பாக மின்வாரிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழக அரசு மற்றும் மின்வாரியத்தை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: