மதுரையில் கலைஞர் நூலகம் கட்டும் பணி முதல மைச்சர் ஆய்வு:

மதுரையில் கட்டப்பட்டு வரும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகள்: முதலமைச்சர் ஆய்வு:

மதுரை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், (
மதுரை மாவட்டம், புதுநத்தம் சாலையில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 213288 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகளை, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை பொறுப்பேற்று மக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞர்
நினைவினைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளான 3.6.2021 அன்று சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கு மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் தரைதளத்துடன் கூடிய 6 தளங்கள் கொண்ட கட்டடம் 213288 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு 11.01.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
12 மாதங்களுக்குள் பணிகளை 100 சதவிகிதம் நிறைவேற்றி சிறப்பு வாய்ந்த இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகத்தின் கீழ்தளம் நூலகத்திற்கு வரும் வாசகர்களின் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காகவும் ஜெனரேட்டர் பொருத்துவதற்கான தளமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அமர்ந்து படிக்கின்ற வகையில் தேவையான புத்தகங்கள் இருக்கைகள் 250 இருக்கை வசதியுடன் கூடிய கலையரங்கமும்; முதல் தளத்தில் குழந்தைகள் நூலகமும்இ வாசகர்கள் தினசரி வார,மாத பத்திரிக்கைகளை வாசிப்பதற்கான வசதிகளும்; இரண்டாவது தளத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் அவரால் எழுத்தப்பட்ட கவிதைகள் கட்டுரைகள், அரசியல் இலக்கியம், வரலாற்றுச் சார்ந்த புத்தகங்கள் திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள், இடம்பெறும் வகையிலும், கலைஞரின் ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டு அங்கு அவரின் 4 ஆயிரம் ஆய்வறிக்கை புத்தகங்கள் இடம்பெற செய்யப்படுவதுடன் போட்டித்
தேர்வுகளுக்காக படிக்கின்றவர்களை கருத்திற்கொண்டு அவர்களுக்காக 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நூலகத்தின் மூன்றாவது தளத்தில் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ் இலக்கியப்பகுதி தளமாக அமைப்பதற்கான ஏற்பாடுகளும்இ 4-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பகுதியாகவும் 5-வது தளத்தில் ஐம்பெரும்காப்பியங்கள் பதினெண்கீழ்கணக்கு உள்ளிட்ட அரிய வகை புத்தகங்களை வைப்பதற்கான பகுதியாகவும்
6-வது தளத்தில் பார்வையற்றோர் பயன்படுத்தும் தளமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், சிறப்பு வாய்ந்த இந்த நூலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்துடன் தொடுதிரை வசதி, ஜெனரேட்டர் வசதி மற்றும் 6 மாடிகளுக்கும் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக நகரும் படிகட்டுகள் வசதி, நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி என பல்வேறு நவீன வசதிகளுடன் நூலகத்தை அமைப்பதற்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் மாடித் தோட்டத்துடன் நூல்களை படிப்பதற்கான வசதியும் கலைக்கூடமும் அமைக்கப்படுகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொண்டு
உரிய காலத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.வெங்கடேசன், ஜி.தளபதி, எம்.பூமிநாதன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. எஸ்.அனீஷ் சேகர், பொது நூலக இயக்குநர் (பொறுப்பு) க. இளம்பகவத்
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: