கிராம சாவடி ஆக்கிரமிப்பு: புகார்:

மதுரை அருகே கிராம சாவடி ஆக்கிரமிப்பு பொதுமக்கள் ஆட்சியிடம் புகார்:

மதுரை:

மதுரை அருகே தேனூரில் கிராமம் சாவடியை ஆக்கிரமித்து, கோயில் கட்டி வசூலில் ஈடுபடுவதாக, தனி நபர் மீது மதுரை மாவட்ட ஆட்சியரிடம், கிராம முக்கியஸ்தர் எம்.எம். முத்துநாயகம் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சோணை முத்து மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்
புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தேனூர் கிராமத்தில் உள்ள கிராம சாவடியை ஆக்கிரமித்து, நெடுஞ்செழியன் பாண்டியன் என்பவர் கோவிலைக் கட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறாராம் .
இது தொடர்பாக, அறநிலையத் துறை, காவல்துறையிடம்,
கிராம மக்கள் சார்பில் புகார் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை யாம்.
ஆகவே ,துரித நடவடிக்கை எடுத்து, கிராம சாவடி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ,தேனூர் பகுதி முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் திரண்டு வந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரிடம் புகார் மனு அளித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: