மக்காச்சோளம் விளைச்சல் அமோகம் விவசாயிகள ் மகிழ்ச்சி:

வத்திராயிருப்பு பகுதியில் மக்காச்சோளம் விளைச்சல் அமோகம்… விவசாயிகள் மகிழ்ச்சி…..

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம் விளைச்சல் நன்றாக உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், தைலாபுரம், அக்கணாபுரம், இலந்தைக்குளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம், அத்திக்கோவில், இலந்தைக்குளம், மீனாட்சிபுரம், தாணிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததாலும், தற்போது கோடை மழையும் நன்றாக பெய்ததால் இந்தப்பகுதி நீர்நிலைகளுக்கு தண்ணீர்வரத்து நன்றாக இருந்தது. மேலும் கிணறுகளிலும் தண்ணீர் பெருகியிருந்தது. இதனால் இந்த ஆண்டு விவசாயம் மிக செழிப்பாக இருந்து வருகிறது. தற்போது இந்தப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் அறுவடை துவங்கிவிடும். இந்தப்பகுதி மக்காச்சோள கதிர்கள் நன்றாக விளைந்திருப்பதால், இதற்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நெல் விளைச்சல் நன்றாக இருந்த நிலையில், தற்போது மக்காச்சோள விளைச்சலும் சிறப்பாக இருப்பதால் இந்தப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: